Advertisement
Advertisement
Advertisement

ஆஸ்திரேலிய பெஸ்ட் லெவன் அணியில் அஸ்வின்,ரோஹித் உள்பட 4 இந்தியர்களுக்கு இடம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வெலன் அணியை தேர்வு செய்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 31, 2021 • 13:39 PM
Cricket Australia names Best Test XI of 2021; R Ashwin, Rohit Sharma among 4 Indians included in lis
Cricket Australia names Best Test XI of 2021; R Ashwin, Rohit Sharma among 4 Indians included in lis (Image Source: Google)
Advertisement

நடப்பாண்டில் டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கியவர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ள அணியில் ஒரே ஒரு ஆஸ்திரேலிய வீரர் மட்டுமே உள்ளனர். அதிகபட்சமாக 4 இந்தியர்கள் உள்ளனர்

தொடக்க வீரராக ரோகித் சர்மா தேர்வாகியுள்ளார். நடப்பாண்டில் 11 போட்டியில் விளையாடி ரோகித் 906 ரன்களை குவித்துள்ளார்.இதில் 2 சதம் 4 அரைசதம் அடங்கும். மற்றொரு தொடக்க வீரராக இலங்கை அணியின் கருணரத்னே இடம்பெற்றுள்ளார். அவர் நடப்பாண்டில் 902 ரன்களை சேர்த்துள்ளார். இந்த அணியில் ஒரே ஒரு ஆஸ்திரேலிய வீரராக லபுசாக்னே இடம்பெற்றுள்ளார். அவர் 5 போட்டிகளில் விளையாடி 526 ரன்களை தேர்வு செய்துள்ளார்

Trending


நடப்பாண்டில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 4ஆவது வீரராக தேர்வாகியுள்ளார். அவர் 1708 ரன்கள் அடித்துள்ளார். நடுவரிசையில் 5ஆவது வீரராக பாகிஸ்தான் அணியின் ஃபாவத் ஆலம் தேர்வாகியுள்ளார்.9 போட்டிகளில் களமிறங்கி 571 ரன்களை அவர் அடித்துள்ளார். 6ஆவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் தேர்வாகியுள்ளார். 

இந்த அணியின் 7ஆவது வீரராக ஆல்ரவுண்டரான தமிழக வீரர் அஸ்வின் தேர்வாகியுள்ளார். அஸ்வின் நடப்பாண்டில் 54 விக்கெட்டும், 355 ரன்களையும் குவித்துள்ளார். அவருக்கு அடுத்து நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் இடம்பெற்றுள்ளார். அவர் 5 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 9ஆவது வீரராக இந்தியாவின் அக்சர் பட்டேல் தேர்வாகியுள்ளார். 5 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்

10ஆவது வீரராக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஹசன் அலியும்,11வது வீரராக ஷாகின் அஃப்ரிடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement