
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தன் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு எப்போதும் தனி இடம் உள்ளது. காரணம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள அரசில் பிரச்சனை காரணமாக இவ்விரு அணிகளும் கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன. இதன் காரணமாக ஐசிசி நடத்தும் தொடகளில் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றனர்.
இதன் காரணமாக இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு கூடுதல் எதிர்பார்ப்புகள் எழுந்தன. அதற்கு தகுந்தார்போல் ஐசிசியும் ஒவ்வொரு தொடரின் போது இவ்விரு அணிகளையும் ஒரே குழுவில் வைத்திருப்பதுடன், இவ்விரு அணிகளும் மோதும் படியான ஆட்டவணையை ஒவ்வொரு முறையும் வடிவமைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோது போட்டிகளுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் மீண்டும் இருதரப்பு தொடர்களில் விளையாட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துவருகின்றனர். மேற்கொண்டு இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியை நடுநிலை தன்மையுடன் நடத்த பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமானது இந்தியா, பாகிஸ்தான் அணிகளை வைத்து முத்தரப்பு தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறது.