
Cricket: Uma, Rashi, Anusha Earn Call-Ups, No Place For Renuka, Richa, Shikha In India’s Squads For (Image Source: Google)
இந்திய மகளிர் அணி வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. 6 போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் பேட்டர் ரிச்சா கோஷ் ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளனர்.இதனால் இந்திய அணி அனுபவமில்லாத பந்து வீச்சாளர்களுடன் விளையாட உள்ளது.