
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக விளையாடியவர் விஜய் சங்கர். இவரை 3டி பிளேயர் என்றும் ஒரு காலத்தில் அழைப்பதுண்டு. ஏனெனில் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்ததன் காரணமாக அவருக்கு இப்பெயரை பிசிசிஐயே வழங்கியது.
ஆனால் அவர், அத்தொடரில் சரியாக விளையாடாத காரணத்தினால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. அதைப் பற்றி பேசிய விஜய் சங்கர், எனக்கு இந்திய அணியில் ஒரு நிரந்தரமான பேட்டிங் வரிசை கிடைக்கவில்லை. நான் எப்போது களமிறங்கப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. அதெல்லாம், நான் விளையாடிய போட்டிகள் எந்த வகையில் செல்கிறது என்பதைப் பொறுத்தே அமைந்தது.
இப்படி ஒரு நிலையான பேட்டிங் ஆர்டர் கிடைக்காத காரணத்தினால் தான் என்னுடைய திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போனது என்று கூறிய விஜய் சங்கர், தன்னை உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்கிய தென் ஆப்ரிக்காவின் ஜாக்கியூஸ் கலீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுடன் ஒப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.