
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் லீக் தொடரை போலவே தென் ஆப்பிரிக்காவிலும் இந்த லீக் தொடர் நடைபெற உள்ளது. இதனை அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்த லீக் தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளையும், ஆறு ஐபிஎல் அணி நிர்வாகங்கள்தான் வாங்கியுள்ளன. அதனால் உலக அளவில் இது மினி ஐபிஎல் தொடர் எனவும் அறியப்படுகிறது.
கிரிக்கெட் களத்தில் பிரீமியர் லீக் தொடர்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருவதும், அதற்கு கிடைத்துள்ள வரவேற்பும், அதற்கு பின்னால் உள்ள வணிகமும் தான் இந்த தொடர் தொடங்கப்பட காரணமாக அமைந்துள்ளது.
சென்னை அணி நிர்வாகம் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியையும், டெல்லி அணி நிர்வாகம் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியையும், லக்னோ அணி நிர்வாகம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும், மும்பை அணி நிர்வாகம் எம்ஐ கேப்டவுன் அணியையும், ஹைதராபாத் அணி நிர்வாகம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் வாங்கியுள்ன.