ஐபிஎல் 2025: சிறப்பு சாதனைக்காக காத்திருக்கும் எம்எஸ் தோனி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடத்திர வீரர் மகேந்திர சிங் தோனி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியானது நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பதற்கான மும்பை இந்தியன்ஸ் அணியானது நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Trending
அதன்படி, ஒரு விக்கெட் கீப்பராக, மகேந்திர சிங் தோனி ஐபிஎல்லில் 264 போட்டிகளில் 257 இன்னிங்ஸ்களில் 148 கேட்சுகளை எடுத்துள்ளார். மும்பைக்கு எதிராக அவர் இரண்டு கேட்சுகளைப் பிடித்தால், ஐபிஎல்லில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெறுவார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிக கேட்சுகளைப் பிடித்த வீரர்கள் பட்டியலிலும் தோனி முதலிடத்தில் குறிப்பிடத்தக்கது.
ஒரு விக்கெட் கீப்பராக அதிக ஐபிஎல் கேட்சுகள்
- எம்.எஸ். தோனி - 148 கேட்சுகள்
- தினேஷ் கார்த்திக் - 137 கேட்சுகள்
- விருத்திமான் சஹா - 113 கேட்சுகள்
- ரிஷப் பந்த் - 95 கேட்சுகள்
- ராபின் உத்தப்பா - 90 கேட்சுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 250 சிக்ஸர்கள்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் மகேந்திர சிங் தோனி 2 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களைப் பூர்த்தி செய்வார். இதனை செய்யும் பட்சத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 250 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் எனும் பெருமையைப் பெறுவதுடன், ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் வரிசையிலும் அவர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 258 போட்டிகளில் 225 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள தோனி, 5118 ரன்கள் எடுத்து 248 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவர் இரண்டு சிக்ஸர்கள் அடித்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 250 டி20 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலிலும் அவர் 4ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக அதிக டி20 சிக்ஸர்கள்
- விராட் கோலி - 286 சிக்ஸர்கள்
- கிறிஸ் கெய்ல் - 263 சிக்ஸர்கள்
- கீரன் பொல்லார்ட் - 258 சிக்ஸர்கள்
- எம்.எஸ். தோனி - 248 சிக்ஸர்கள்
Win Big, Make Your Cricket Tales Now