-mdl.jpg)
எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என திட்டத்தை தயார் செய்து வருகிறது. மேலும் ஒவ்வொரு அணிக்கும் எந்த வீரர்களை தேர்ந்தெடுத்தால் அணியின் பலம் அதிகரிக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் , ஐபிஎல் தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வீரரை தேர்ந்தெடுத்தால் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் பலர் அறிவுரை வழங்கி இருக்கின்றனர். குறிப்பாக டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டதால் அவருக்கு பதில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை சென்னை அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இதனால் பென் ஸ்டோக்ஸ் அல்லது சாம்கரன் அல்லது ஜேசன் ஹோல்டர் போன்ற தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரை சென்னை அணி தேர்ந்தெடுக்கும் என ஒவ்வொருவரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் கடந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, சென்னை அணி சாம் காரன் மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இரு வீரர்களையும் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.