சாம்பியன்ஸ் கோப்பை 2025: இப்ராஹிம் ஸத்ரான் சாதனை சதம்; இங்கிலாந்துக்கு 326 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை 2025: இப்ராஹிம் ஸத்ரான் சாதனை சதம்; இங்கிலாந்துக்கு 326 டார்கெட்! (Image Source: Google)
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஸத்ரான் - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதன்மூலம் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
பின்னர் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் ஸத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். இவர்கள் இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அரைசதத்தை நெருங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricketபின்னர் ஸத்ரானுடன் இணைந்த நபியும் சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோரும் 300 ரன்களைக் கடந்தது. மேற்கொண்டு இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் இப்ராஹிம் ஸத்ரான் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 177 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், லியாம் லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News