CT 2025: தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியில் இருந்து பென் சீயர்ஸ் விலகிய நிலையில், மாற்று வீரராக ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் காயம் காரண்மாக பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. முன்னதாக அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் ஐஎல்டி20 தொடரின் போது காயமடைந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு தொடரின் போது ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவும் காயத்தை எதிர்கொண்டார். இதனால் இவர்கள் இத்தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Trending
இந்நிலையில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரும் காயத்தை சந்தித்துள்ளதுடன், இத்தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பென் சீயர்ஸ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அவருக்கான மாற்று வீரராக ஜேக்கப் டஃபி நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருவரும் தற்சமயம் பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். இதில் பென் சீயர்ஸ் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிலையில், தற்போது பயிற்சியின் போது காயத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே அந்த அணி சிக்கலை சந்தித்து வரும் நிலையில் தற்போது மற்றொரு வீரரும் தொடரில் இருந்து விலகியுள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவாஅன் கான்வே, லோக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ராச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி
Also Read: Funding To Save Test Cricket
Win Big, Make Your Cricket Tales Now