Advertisement

ஐசிசி மாதாந்திர விருதுகள்: பரிந்துரை பட்டியலில் பும்ரா, கம்மின்ஸ், மந்தனா!

டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியா வீரர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Advertisement
ஐசிசி மாதாந்திர விருதுகள்:  பரிந்துரை பட்டியலில் பும்ரா, கம்மின்ஸ், மந்தனா!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பரிந்துரை பட்டியலில் பும்ரா, கம்மின்ஸ், மந்தனா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 07, 2025 • 09:00 PM

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 07, 2025 • 09:00 PM

அந்த வகையில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் டேன் பேட்டர்சன் ஆகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இதில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார். 

Trending

அதேபோல் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதுதவிர்த்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தனது அபார பந்துவீச்சின் மூலம் அணியின் வெற்றிக்கு உதவிய தென் ஆப்பிரிக்க அணியின் டேன் பேட்டர்சன் இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

இதுதவிர்த்து டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலிய அணியின் அனபெல் சதர்லேண்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் நோன்குலுலேகோ ம்லபா ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 6 ஒருநாள் போட்டிகளில் 270 ரன்களையும், 3 டி20 போட்டிகளில் 193 ரன்களையும் குவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் இந்தியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் சதமடித்து அசத்தியதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் அனபெல் சதர்லேண்டிற்கும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இதுதவிர்த்து இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை நோன்குலுலேகோ ம்லபா 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதில் வாக்குகள் அடிப்படையில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை தேர்வு செய்து அறிவிக்கப்படவுள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement