பயிற்சி ஆட்டம்: மழையால் ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க போட்டி ரத்து!
உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கியது. அதன்படி, பாகிஸ்தான் - நியூசிலாந்து, இலங்கை - வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடுவதாக இருந்தது.
இதில் ஹைதரபாத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியும், கௌகாத்தில் நடைபெற்றுவரும் வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணியும் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடி வருகின்றன.
Trending
அதேசமயம் திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக டாஸ் போடப்படாமல் தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்து வரும் காரணத்தால் இப்போட்டி டாஸ் போடப்படாமலேயா முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து தென் ஆப்பிர்க்க்க அணி வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியையும், அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணியும் விளையாடவுள்ளன்.
Win Big, Make Your Cricket Tales Now