
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் நிலையின், இத்தொடரின் சூப்பர் 6 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. அதேசமயம் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறாமல் இருந்த அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் இன்று 7ஆவது இடத்திற்கான போட்டியில் விளையாடின.
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவ் டெய்லர் - சுஷாந்த் மதானி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் டெய்லர் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் மொனாக் படேலும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் சுஷாந்துடன் இணைந்த முக்கமல்லாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் இருவரும் தலா 55 ரன்களை எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.