
உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலீல் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை சிறப்பன தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட இருவரும் அரைசதம் கடக்க, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 120 ரன்களை எட்டியது. பின் 59 ரன்கள் எடுத்திருந்த ஓடவுட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பரேசியும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து விக்ரம்ஜித்துடன் இணைந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்ரம்ஜித் 88 ரன்களிலும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 83 ரன்களிலும் என ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டனர்.