
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 14ஆவது நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணியில் தொடக்க வீரர் ஆசிஃப் ஷேக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏற்றமற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து குஷார் புர்டல் 27, பீம் ஷார்கி 22, ஆரிஃப் ஷேக் 6 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரோஹித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.