Ned vs nep
T20 WC 2024: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; நேபாளை வீழ்த்தியது நெதர்லாந்து!
ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டல்லாஸில் நடைபெற இருந்த இப்போட்டியின் டாஸானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நேபாள் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டெல் மற்றும் ஆசிஃப் சேக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆசிஃப் சேக் 4 ரன்களுக்கும், குஷால் புர்டெல் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய அனில் ஷாவும் 11 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோஹித் பௌடல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய குஷால் மல்லா, தீபேந்திர சிங் ஐரி, சோம்பால் காமி ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Ned vs nep
-
T20 WC 2024: நேபாள் அணியை 106 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணியானது 106 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து!
நேபாள் அணிக்கெதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; நேபாளத்தை வீழ்த்தியது நெதர்லாந்து!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: நேபாளை 167 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24