
இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஐசிசி்யின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை தாண்டியது.
அதன்பின் 54 ரன்களில் சார்லஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ப்ரூக்ஸ் 25 ரன்களுக்கும், ஷாய் ஹோப் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து 76 ரன்களை எடுத்திருந்த பிராண்டன் கிங்கும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதேசமயம் இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.