
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கும்பி மற்றும் கேப்டன் கிரெக் எர்வின் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் கும்பி 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வெஸ்லி மதேவெரே 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கிரேக் எர்வின் 47 ரன்களிலும், சீன் வில்லியம்ஸ் 23 ரன்களுக்கும் ஆட்டமிழக்க ஜிம்பாப்வே அணி 114 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ரஸா - ரியான் பர்ல் இணை அதிரடியான விளையாடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட இருவரும் அரைசதம் கடந்ததும் அசத்தினர்.