உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: சிக்கந்தர் ரஸா அபாரம்; நெதர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற் 5ஆவது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலீல் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை சிறப்பன தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட இருவரும் அரைசதம் கடக்க, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 120 ரன்களை எட்டியது. பின் 59 ரன்கள் எடுத்திருந்த ஓடவுட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பரேசியும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து விக்ரம்ஜித்துடன் இணைந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்ரம்ஜித் 88 ரன்களிலும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 83 ரன்களிலும் என ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டனர்.
Trending
அதன்பின் களமிறங்கிய பாஸ் டி லீட், தேஜா ஆகியோரும் சொற்பரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் சஃபிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைச் சேர்த்துள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ரஸா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கும்பி மற்றும் கேப்டன் கிரேக் எர்வின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய எர்வின் அரைசதம் கடந்த கையோடு ஆட்டமிழக்க, மறுபக்கம் 40 ரன்களை எடுத்திருந்த கும்பியும் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய வெஸ்லி மதேவெராவும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதன்பின் சதமடிப்பார என எதிர்பார்த்த சீன் வில்லியம்ஸ் 91 ரன்களில் விக்கெட்டை இழந்து 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய 54 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்சர்கள் சதமடித்து அசத்தியதுடன் 102 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 40.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா பேட்டிங்கில் 102 ரன்களையும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now