1-mdl.jpg)
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக தகுதிப்பொற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமீப காலங்களில் அசைக்கமுடியா அணியாக சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு தயாராக இருக்கிறது .
குறிப்பாக முக்கிய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ், பும்ரா போன்ற காயத்தை சந்தித்த வீரர்களும் முழுமையாக குணமடைந்து அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கின்றனர். முன்னதாக உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகிய மூவருமே இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதனால் எதிரணியில் இருக்கும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்ட தேர்வுக்குழு 2023 கோப்பையில் காயத்தை சந்தித்த அக்ஸர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்தனர். அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அஸ்வின் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் 4 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.