Advertisement

IND vs ENG: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; மாற்று வீரராக டான் லாரன்ஸ் சேர்ப்பு!

தனிப்பட்ட காரணங்களினால் இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரராக டான் லாரன்ஸை அணியில் சேர்த்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

Advertisement
IND vs ENG: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; மாற்று வீரராக டான் லாரன்ஸ் சேர்ப்பு!
IND vs ENG: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; மாற்று வீரராக டான் லாரன்ஸ் சேர்ப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 21, 2024 • 07:10 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. மேலும் இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப்பட்டியளில் முக்கிய அங்கமாக இருக்கும் என்பதால் இத்தொடரின் மீதான எதிபார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 21, 2024 • 07:10 PM

மேலும் இத்தொடருக்கு தயாராகும் விதமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திரம் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Trending

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஹாரி ப்ரூக் விலகியுள்ளார். அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள மாட்டார். அவருக்கான மாற்று வீரரை விரைவில் இங்கிலாந்து தேர்வுக் குழு அறிவிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரராக டான் லாரன்ஸை இந்திய தொடருக்காக இங்கிலாந்து அணி தேர்வுசெய்துள்ளது. அவர் கூடிய விரைவில் இங்கிலாந்து அணியுடன் இணைந்து இந்தியா பயணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரி ப்ரூக், 4 சதம் மற்றும் 7 அரைசதங்களுடன் 1181 ரன்களைச் சேர்த்துள்ளார். அவருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள டான் லாரன்ஸ் இங்கிலாந்துக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 551 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement