
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின், அக்சர் பட்டேல், சாஹல் ஆகியோர் மெயின் அணியிலும், ரவி பிஷ்னாய் ரிசர்வ் வீரராகவும் இடம்பெற்றுள்ளார். இதனால் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளராக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடிக்கிறது.
ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் லெக் ஸ்பின், பேட்ஸ்மன்களுக்கு சற்று நெருக்கடி தரும். ரன் குவிக்க முற்படும்போது விக்கெட்டுகள் விழ வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணியில் சாஹல் முதல் சுழற்பந்துவீச்சாளராக இடம் பெறுவார். இந்த நிலையில் இரண்டாவது சுழற் பந்துவீச்சாளர் யார் என்ற குழப்பம் நீடிக்கிறது. அக்சர் பட்டேலை சேர்க்கலாமா அல்லது அஸ்வினை சேர்க்கலாமா என்ற சந்தேகம் இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டேனியல் விட்டோரி, “டி20 அணியில் கண்டிப்பாக அஸ்வின் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அதற்கு காரணம் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நிறைய முறை விளையாடி இருக்கிறார். அவருக்கு ஆஸ்திரேலியா ஆடுகளம் எப்படி செயல்படும் என்று நன்றாக தெரியும். அந்த அனுபவம் அஸ்வினுக்கு நிச்சயம் கை கொடுக்கும். மேலும் அஸ்வின் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்வதில் வல்லவர்.