
Daniel Vettori In Line To Become Assistant To Australia Head Coach (Image Source: Google)
ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த ஜஸ்டின் லாங்கரின் 4 வருட பதவி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் மெக்டோனால்ட் பதவியேற்றார். இந்நிலையில் உதவி பயற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் போது ஆஸ்திரேலியா அணிக்கு தற்காலிக அறிவுரையாளராக டேனியல் விட்டோரி இருந்தார். இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளருடன் சேர்ந்து விட்டோரி, மைக்கேல் டி வெனுடோ தனது பணியை தொடர்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.