
Darren Sammy Becomes A Cricket West Indies Board Member (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி. இவரது தலைமையின் கிழான வெஸ்ட் இண்டீஸ் அணி 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
தற்போது 37 வயதாயகும் டேரன் சமி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 38 டெஸ்டுகள், 126 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அல்லாத இயக்குநராக டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைப் போல மேலும் இருவர் இயக்குநர்களாகத் தேர்வாகியுள்ளார்.