
Darren Sammy Names West Indies Cricketer Who Can Trouble India (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நரேந்தி மோடி மைதானத்தில் போட்டிகள் ஒருநாள் தொடரும், கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் டி20 தொடரும் தொடங்குகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ள அணியில் இளம் முகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கிரோன் பொல்லார்ட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டி20 உலகக் கோப்பையை வென்ற ஒரே வெஸ்ட் இண்டீஸ் கேப்டனான டேரன் சமி தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.