IND vs SL : 24 பேர் அடங்கிய இலங்கை அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள், டி20 தொடர்களுக்கான 24 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 18ஆம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் மும்முறமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,இத்தொடருக்கான தசுன் ஷானகா தலைமையிலான 24 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இங்கிலாந்தில் கரோனா பயோ பபுள் விதிகளை மீறிய டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், குணதிலகா ஆகிய மூவருக்கும் இந்தியாவுக்கு எதிரான இலங்கை ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை.
மேலும் முன்னாள் கேப்டன் குசால் பெரேரா, வேகப்பந்து வீச்சாளர் பினுரா ஃபெர்னாண்டோ ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இலங்கை அணி: தசுன் ஷனாகா(கேப்டன்), தனஞ்செயா டி சில்வா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சா, பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, வஹிந்து ஹசரங்கா, ஆஷென் பண்டாரா, மினோத் பானுகா, லஹிரு உடாரா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்ஷன், சண்டாகன், அகிலா தனஞ்செயா, ஷிரான் ஃபெர்னாண்டோ, தனஞ்செயா லக்ஷன், இஷான் ஜெயரத்னே, பிரவீன் ஜெயவிக்ரமா, அசிதா ஃபெர்னாண்டோ, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா, இசுரு உதானா.
Win Big, Make Your Cricket Tales Now