
David Miller Ruled Out England T20 Series: இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் நடைபெற இருக்கும் நிலையில், நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் டி20 தொடருக்கு முன்பு, தென் ஆப்பிரிக்க அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நீண்ட காலமாக அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். தி ஹண்ட்ரட் 2025 தொடரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும்போது மில்லர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.