போட்டிக்கு பின் டி காக் என்னிடம் மன்னிப்பு கேட்டார் - டேவிட் மில்லர்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்துகளில் சதம் அடித்து அசத்திய டேவிட் மில்லருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல் ராகுல் 57 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர்.
Trending
இதன்பின் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கரம் 33 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – குவிண்டன் டி காக் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. கடைசி ஓவர் வரை இந்திய அணிக்கு பயம் காட்டிய டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் டேவிட் மில்லர் 106 ரன்களும், டேவிட் மில்லர் 48 பந்துகளில் 69 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
என்னதான் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தி 46 பந்துகளில் சதமும் அடித்த டேவிட் மில்லரையே பாராட்டி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் டேவிட் மில்லரின் இந்த மிரட்டல் பேட்டிங்கை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய டேவிட் மில்லர், “குயின்டன் வெளிப்படையாக போராடினார், ஆனால் அவர் பேட்டிங் செய்து எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினார். அவர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்கும் திறமையான பேட்டர், எனவே அது இலக்கை நெருங்க உதவியாக இருந்தது.
இது ஒரு சிறந்த விக்கெட், இந்தியா தொடக்கத்தில் இருந்தே எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. நீங்கள் பார்த்தது போல், நாங்கள் 16 ரன்கள் மட்டுமே பின் தங்கி இருந்தோம். அவர் (டி காக்) என்னிடம் “நீங்கள் நன்றாக விளையாடினார், ஆனால் என்னால் சரியாக விளையாடமுடியவில்லை என்னை மன்னிக்கவும்' என்றார்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now