சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வார்னர் ஓய்வு?
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து கூடிய விரைவில் ஓய்வை அறிவிக்க உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் வார்னர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்காக மூன்று விதமான தொடரிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய நாட்டிலும் மிகவும் பிரபல்யமான ஒரு வீரராவார்.
ஆஸ்திரேலியா அணியின் கோர் வீரர்களில் ஒருவராக அறியப்படும் டேவிட் வார்னர், பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் மட்டும் சிக்காமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் திகழ்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் இவருக்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.
Trending
இருந்த போதும் ஆஸ்திரேலியா அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் வார்னர் நிச்சயம் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பிரபல செய்தி நிறுவனத்திர்க்கு பேட்டி ஒன்று அளித்த டேவிட் வார்னர், அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலக கோப்பை தொடரோடு தான் ஓய்வு அறிவிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அதில்,“சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுவே என்னுடைய கடைசி வருடம் என நினைக்கிறேன் மேலும் 2024 டி20 உலக கோப்பை தொடரோடு நான் என்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வேன். அமெரிக்காவில் என்னுடைய கிரிக்கெட் கரையரை வெற்றியுடன் முடிப்பது உண்மையில் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என நினைக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
நடந்து முடிந்த 2021 டி20 உலக கோப்பை தொடரில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டியில் அரைசதம் அடித்து தொடர்நாயகன் விருதையும், 36 வயதாகும் டேவிட் வார்னர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now