
உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இன்று சென்னையில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்த முறை ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மிட்சல் மார்ரை டக் அவுட் செய்து வழியனுப்பினார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு அடித்தளத்தை கொடுப்பதற்காக விளையாடினார்கள்.
இவர்கள் இருவரும் அரை சதம் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைப்பதற்கு இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் விட்டுக் கொடுத்தார்கள். பந்தைக் காற்றில் தூக்கி வீசாமல் பிளாட்டாக வீசி கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் குல்தீப் யாதவ் சுதாரித்து தனது மூன்றாவது ஓவரில் பந்தை காற்றில் தூக்கி வீச ஆரம்பித்தார்.