
கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தோடு சேர்த்து சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் பார்ட்னர் ஓர் ஆண்டு அணியில் இருந்து தடை செய்யப்பட்டதோடு கேப்டன் பதவியில் இருக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் ஆஸ்திரேலிய அணியில் இணையவும் தாமதம் ஏற்பட்டது.
அதோடு ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தால் நடத்தப்படும் பிக்பாஷ் லீக் போட்டியிலும் கேப்டனாக அவர் தொடரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதோடு அவர் கேப்டனாக செயல்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் பிபிஎல் சீசனுக்காக சிட்னி தண்டர்ஸ் நிர்வாகத்துடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் டேவிட் வார்னர் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் இந்த தொடரில் அவர் சிட்னி அணிக்கு கேப்டனாக செயல்பட வேண்டும் என்ற ஆதரவு வலுத்து வருகிறது.