David warner captaincy ban
டேவிட் வார்னரின் வாழ்நாள் தடையை நீக்கியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் டேவிட் வார்னர். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இருப்பினும் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களில் விளையாட ஆர்வமுடன் இருப்பதாகவும் அவர் சமீபத்தில் கூறினார்.
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் குற்றஞ்சாட்டப்பட்டு, அதற்காக விளையாட தடையும் பெற்றார். அதன்படி அந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித், அணியின் துணைக்கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
Related Cricket News on David warner captaincy ban
-
வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் - மௌனம் கலைத்த டேவிட் வார்னர்!
கேப்டனாக செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து நான் நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
தனது தடையை எதிர்த்து முறையீடு செய்த மனுவை திரும்ப பெற்றார் டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை வகிக்க தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முறையீடு செய்த டேவிட் வார்னர், தனது மனுவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
மீண்டும் கேப்டானாகிறார் டேவிட் வார்னர்; தடைய விலக்கிக்கொள்ள ஆஸி கிரிக்கெட் முடிவு!
கேப்டன் பொறுப்பை வகிக்க டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை விலக்கிக் கொள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. ...
-
நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை - வார்னர்!
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சர்ச்சை சம்பவம் குறித்து நான் நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் கடைசிவரை திறக்கப்படவில்லை என்று டேவிட் வார்னர் தெரிவித்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24