
ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் இன்று துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது. கடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி சதமடித்து இந்தியாவை தோற்கடித்த அவர் ஆஸ்திரேலியா அடுத்தடுத்த கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அதனால் பெரிய தொகைக்கு வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே அவரை ஹைதெராபாத் 6.8 கோடி என்ற தொகைக்கு வாங்கியது. இந்த நிலையில் தம்முடைய சக அணி வீரரை பாராட்ட நினைத்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அதற்கான புகைப்படத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியுள்ளார்.
ஆனால் அப்போது தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் தம்மை பிளாக் செய்திருப்பதை அறிந்து டேவிட் வார்னர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார். அது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டேவிட் வார்னர் ஏமாற்றத்துடன் பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “டிராவிஸ் ஹெட் பற்றிய பதிவை மீண்டும் பதிவிடுவதற்காக நான் முயற்சித்தேன். ஆனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் என்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.