
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கராச்சியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியாயனது 65 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டேவிட் வார்னர் மீண்டும் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறிவுள்ளார். அதன்படி இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக டேவிட் வார்னர் களமிறங்கிய நிலையில் லாகூர் அணி தரப்பில் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி வீசினார். அப்போது அந்த ஓவரின் இரண்டாவது பந்த ஷாஹீன் அஃப்ரிடி வைடராக வீசிய நிலையில், டேவிட் வார்னர் அதனை அடிக்க முயன்றார்.
ஆனால் பந்து அவரது பேட்டின் எட்ஜில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. இதனால் இந்த போட்டியில் டேவிட் வார்னர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸும் அதே ஓவரின் 4ஆவது பந்தில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ஷாஹின் அஃப்ரிடி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.