
இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதற்காக தயாராக இருக்கும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் அணியாக ஆஸ்திரேலியா இருக்கும் என்றே சொல்லலாம்.
ஏனெனில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற அந்த அணி கடந்த மார்ச் மாதம் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்தது. எனவே அக்டோபர் 8ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சென்னையில் நடைபெறும் தங்களுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியா முழு பலத்துடன் களமிறங்கி வெற்றி காண்பதற்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரிடம் செய்தியாளர்கள் சில சுவாரசியமான கேள்விகள் கேட்டனர். அதில் குறிப்பாக கிரிக்கெட்டின் மகத்தான ஃபினிஷர் யார் என்ற கேள்விக்கு தோனியை பதிலாக கொடுத்த அவர், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோருடன் வாய்ப்பு கிடைத்தால் விளையாட விரும்புவதாக மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.