Advertisement
Advertisement
Advertisement

ஒரு போட்டியை வைத்து சாம்பியனை எப்படி முடிவுசெய்வது - டேவிட் வார்னர்! 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என்று கடந்த முறை இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி வலியுறுத்தி இருந்த நிலையில், இம்முறை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அதே கருத்தை கூறியுள்ளார்.

Advertisement
David Warner on the WTC final: 'It should be at least a three-game series'!
David Warner on the WTC final: 'It should be at least a three-game series'! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 03, 2023 • 08:36 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்காகா ஆஸ்திரேலியா வீரர்கள் நீண்ட நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உலக டெஸ்ட் சாம்பியனை ஒரேயொரு போட்டியை மட்டும் வைத்து தேர்வு செய்வதா என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த முறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலியும் இதே கருத்தை கூறி இருந்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 03, 2023 • 08:36 PM

இந்தக் கருத்தையே தற்போது ஆஸ்திரேலியா நட்சத்திர தொடகக வீரர் டேவிட் வார்னரும் வழிமொழிந்துள்ளார். இதுகுறித்து பேசிய டேவிட் வார்னர், “கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடியதன் மூலம் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளோம். அதேபோல் இருவருக்கும் பொதுவான ஒரு ஆடுகளத்தில் விளையாட உள்ளோம். இதனால் சாம்பியனை ஒரேயொரு போட்டியின் மூலம் தேர்வு செய்வது சரியாக இருக்காது.

Trending

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஏற்கனவே நாங்கள் நிறைய முறை விளையாடி இருக்கிறோம். ஆனால் இந்திய அணிக்கு எதிராக விளையாடியதே இல்லை. அதனால் 3 போட்டிகள் கொண்ட தொடராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன். இரு தரப்புமே சிறந்த அணிகள். சிறந்த வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சு கூட்டணியை வைத்திருக்கிறோம். டியூக் பந்துகளில் அந்நிய மண்ணில் விளையாடுவது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement