
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி ஏழாம் தேதி இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது .இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன . சமீபகாலமாக டெஸ்ட் தொடரில் சரியான ஆட்டங்களை வெளிப்படுத்தாத ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்த வரலாற்று சிறப்புமிக்க இறுதிப்போட்டியிலும் பங்கே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
சமீபகாலமாகவே அவரது டெஸ்ட் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது . இந்தியா அணிக்கு எதிராக இந்தாண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் ஒரு அரை சதம் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் அதற்குப் பின்பு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார் . இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதற்கான முடிவை எடுத்திருக்கிறார் டேவிட் வார்னர் .
அதன்படி, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டி தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருக்கிறார் . அந்தப் போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்க மாட்டேன் எனவும் அறிவித்துள்ளார் வார்னர் .