
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வாதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், அதற்கு முன்பு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பிற்கும் என சர்வதே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் வார்னர் ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வர்னர் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொட்ரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் வார்னர் விட்டுச்சென்ற இடத்தை அறிமுக வீர்ர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் நிரப்பவுள்ளார்.
ஏனெனில் ஆஸ்திரேலியாவின் டி20 அணி மட்டுமின்றி, ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த டேவிட் வார்னருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்காக தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.