Advertisement

என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய முயற்சி செய்கிறேன் - டேவிட் வார்னர்!

விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுவது என்னுடைய பாணி. இதற்காக என் உடல் தகுதி குறித்து நான் பெருமைப்படுகிறேன் என ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan October 25, 2023 • 22:35 PM
என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய முயற்சி செய்கிறேன் - டேவிட் வார்னர்!
என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய முயற்சி செய்கிறேன் - டேவிட் வார்னர்! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா அணி இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் 309 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று உலகக் கோப்பை சாதனையைச் செய்திருக்கிறது. டேவிட் வார்னர் இந்த போட்டியில் தன்னுடைய ஆறாவது உலகக் கோப்பை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் உலக கோப்பையில் அதிக சதம் அடித்தவர்களில் சக நாட்டவர் ரிக்கி பாண்டியை தாண்டி, சச்சின் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

போட்டிக்கு பின் நீண்ட நேரம் பேசிய டேவிட் வார்னர் “இது மேக்ஸ்வெல்லுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம். நான் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் இரண்டு சதங்கள் அடித்தது ரிதத்தைப் பற்றியது. இந்த மாதிரியான டிராக்குகளில் நீங்கள் இப்படி விளையாடுவதற்கு உங்களை முதலில் அனுமதிக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக சென்னையில் விளையாடிய முதல் போட்டி எப்பொழுதும் அங்கு சவாலானதுதான். இதற்கு அடுத்து லக்னோவில் பெரிதாக நேரமில்லை. இதற்குப் பிறகு நானே என்னை கட்டுப்படுத்தி ஐம்பது ஓவர்களுக்கும் விளையாடுவதற்கு தயார் செய்து கொண்டேன். 

Trending


விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுவது என்னுடைய பாணி. இதற்காக என் உடல் தகுதி குறித்து நான் பெருமைப்படுகிறேன். இதை விராட் கோலி அதிகம் செய்வதை நீங்கள் பார்க்க முடியும். இது உங்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும். இது ஒரு ஆட்டிட்யூட். நான் கேப்களில் பந்தை அடிக்க யோசித்துக் கொண்டு இருந்தேன். நான் இதற்காக ரிவர்ஸ் ஸ்வீப் விளையாட நினைத்தேன். ஆனால் அவர்கள் பந்தை ஷார்ட் லென்த்தில் வீசினார்கள். 

இதன் காரணமாக நான் கட் ஷாட் மூலம் பவுண்டரிகள் அடித்தேன். இது எனக்கு நல்ல பேட்டிங் ரிதத்திற்கு வர உதவியது. பாண்டிங்கை கடந்து சச்சின் உடன் சத எண்ணிக்கையில் வந்தது நல்ல விஷயம். நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய முயற்சி செய்கிறேன். இப்படியான பெரிய தொடர்களில் விளையாடுவதற்காகவே இருக்கிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் என்ன செய்கிறோமோ, அதை இங்கும் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement