BAN vs ENG, 1st ODI: மாலன் சதத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் இன்று தொடங்குகிறது. அதன்படி தாக்காவில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பால் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தர்.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் தமிம் இக்பாலும் 23 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த நஜ்முல் ஹொசைன் சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் வந்த முஷ்பிக்கூர் ரஹிம் 17, ஷாகிப் அல் ஹசன் 8 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் நஜ்முல் ஹொசைன் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 58 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
Trending
பின்னர் வந்த மஹ்மதுல்லா 31 ரன்களில் ஆட்டமிழக்க, அஃபிஃப் ஹுசைன், மெஹிதி ஹசன், டஸ்கின் அஹ்மத் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், மொயீன் அலி, ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஜேசன் ராய் 4 ரன்களிலும், பிலிப் சால்ட் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து களமிறங்கிய டேவிட் மாலன் நிதான ஆட்டத்தை வெளிப்படிடுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திவர, அவருக்கு துணையாக களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ், கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோரும் ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் வந்த வில் ஜேக்ஸ் ஓரளவு தாக்குப்பிடித்து 26 ரன்களையும், மொயின் அலி 14 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க மறுமுனையில் அபாரமாக விளையாடிய வந்த டேவிட் மாலன் சதமடித்து அணியை வெற்றியை நோக்கி அழத்துச் சேன்றார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மாலன் 8 பவுண்டரி 4 சிக்சர்கள் என 114 ரன்களை குவித்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் இலக்கை அடைந்ததுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி போராடி வெற்றிபெற்றது. வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டத்தை கடைசி வரை இழுத்துப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now