பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராகுல் - மயங்க்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களைச் சேர்த்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் ரஹானே சேர்க்கப்பட்டார்
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் இணை தொடக்கம் தந்தனர். இதில் ராகுல் பொறுமையைக் கடைபிடிக்க, மறுமுனையில் அகர்வால் ஸ்கோர் கணக்கை உயர்த்தும் பணியில் ஈடுபட்டார்.
இதனால் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களைச் சேர்த்தது. இதில் மயங்க் அகர்வால் 46 ரன்களுடனும், கேஎல் ராகுல் 29 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now