Advertisement

Day-Night Test: லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் அரைசதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!

இந்திய அணிக்கு எதிரான பகளிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்துள்ளது.

Advertisement
Day-Night Test: லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் அரைசதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
Day-Night Test: லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் அரைசதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 07, 2024 • 11:53 AM

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 07, 2024 • 11:53 AM

அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை ஒரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் 37 ரன்களுக்கு, ஷுப்மன் கில் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்து உள்ளிட்ட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Trending

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தர். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களைச் சேர்த்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை நாதன் மெக்ஸ்வீனி 38 ரன்களுடனும், மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்கள் எடுத்த கையோடு பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும் 2 ரன்னுடனும் என ஜஸ்பிர்த் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் லபுஷாக்னேவுடன் இணைந்த டிராவிஸ் ஹெட் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் லபுஷாக்னே தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். 

Also Read: Funding To Save Test Cricket

பின் 64 ரன்களில் லபுஷாக்னே ஆட்டமிழந்த நிலையில், மறுபக்கம் டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தை கடந்தார். இதன்மூலம் இரண்டாம் நாள் உண்வு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 53 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், நிதீஷ் ரெட்டி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 11 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement