Advertisement

ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 07, 2024 • 14:35 PM
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுகான வாய்ப்பில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Trending


டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்விகளைச் சந்தித்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணி இனிவ்ரும் போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அணியின் பேட்டிங்க் ஆர்டரில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், பிரித்வி ஷா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்களுடன் காயத்தில் இருந்து மீண்டுள்ள டேவிட் வார்னரும் இன்றைய போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் வேகப்பந்துவீச்சில் முகேஷ் குமார், கலீல் அஹ்மத், லிஸாத் வில்லியம்ஸ் ஆகியோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: பிருத்வி ஷா, ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன்), அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், ரசிக் சலாம், லிசாத் வில்லியம்ஸ், கலீல் அகமது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இந்த சீசனில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 8 வெற்றிகளை குவித்து அசத்தியுள்ளதுடன், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் இணை தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகின்றனர். அவர்களுடன் தற்போது ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். 

இருப்பினும் ஷிம்ரான் ஹெட்மைய, ரோவ்மன் பாவெல் போன்ற வீரர்கள் கடந்த போட்டியில் சொதப்பியது அணிக்கு சற்று பின்னடவாக பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான் ஆகியோருடன் யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோரும் இருக்கின்றன. ஆனால் இதில் அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோர் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பாவல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement