
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றியுள்ள அந்த அணி நேற்று கேப் டவுன் நகரில் தொடங்கிய 2ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
ஆனால் இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வேர்ரைன் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 163 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர், லுங்கி இங்கிடி, ரபாடா தலா 3 விக்கெட்களை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 98 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 62/3 ரன்கள் எடுத்து இன்னும் 36 ரன்கள் பின்தங்கியுள்ளது.