ஐபிஎல் 2025: பிசிசிஐ கூட்டத்தில் ஷாருக் கான், நெஸ் வடியாவிற்கு இடையே கடும் வாக்குவாதம்!
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான பிசிசிஐ கூட்டத்தின் போது வீரர்கள் ரீடென்ஷனுக்கான விவாதத்தில் கேகேஆர் அணி உரிமையளர் ஷாருக் கான் மற்றும் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் நெஸ் வடியாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் மேகா ஏலமானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளன. அதேசமயம், இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஏலத்தொகையாக ரூ.120 கோடி ஒதுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு ஏலத்தொகையின் உச்சவரம்பாக ரூ.100 கோடி மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரிடென்ஷன் விதிகளிலும் சில மாற்றங்கள் செய்வதற்கு அணிகளிடம் ஆலோசனை கேட்கபட்டது. இதில் ஒரு சில அணிகள் ரிடென்ஷன் முறையில் 8 வீரர்களை தேர்வு செய்யவும், சில அணிகள் 5 முதல் 7 வீரர்களை தேர்வு செய்யவும், சில அணிகள் அனைத்து வீரர்களும் ஏல முறையில் மட்டுமே வாங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Trending
இது தொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் 8 வீரர்களை ரீடென் செய்யவும், 8 வீரர்களை ஆர்டிஎம் முறையில் வாங்க வேண்டும் என்று கூறியதாகவும், ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடிய ஒரு அணி ஒரு வீரரை மட்டுமே ரீடென் செய்ய வேண்டும் மற்றும் ஒரு வீரரை மட்டும் ஆர்டிஎம் முறையில் வாங்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அக்கூட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளர் ஷாருக்கானுக்கும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு இம்பேக்ட் பிளேயர் விதி குறித்த விவாதத்திலும் அணி உரிமையாளர்களில் பெரும்பாலானோர் அந்த விதியை நீக்கும் படி ஆலோசனை கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
SRK wants the team to be able to retain a high number of players, while PBKS owners are against that idea!#Cricket #KKR #PBKS #ShahrukhKhan #PunjabKings pic.twitter.com/6uVbljLu11
— CRICKETNMORE (@cricketnmore) July 31, 2024
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் இக்கூட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும், மற்ற அணி உரிமையாளர்கள் காணொளி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியீடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now