
PAK-W vs BAN-W, WCWC 2025: மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் வங்கதேச அணியின் அறிமுக வீராங்கனை ருபியா ஹைதர் அரைசதம் கடந்து அசத்தியதுடன், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது செப்டம்பட் 30ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கிடது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஒமைமா சொஹைல் மற்றும் சித்ரா அமீன் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர்.
மேற்கொண்டு அணியின் மற்றொரு தொடக்க வீரர் முனீபா அலியும் 17 ரன்களிலும், ரமீன் ஷமின் 23 ரன்னிலும், அலியா ரியாஸ் 13 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த சித்ரா நவாஸ் - கேப்டன் ஃபாத்திமா சனா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இதில் ஃபாத்திமா சனா 15 ரன்களுக்கும், ஃபாத்திமா சனா 22 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டையானா பைக் 16 ரன்களைச் சேர்த்தார்.