Advertisement

SA vs IND: அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகிய சஹார், ஷமி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தீபக் சஹாரும், டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமியும் விலகியுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 16, 2023 • 11:32 AM
SA vs IND: அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகிய சஹார், ஷமி!
SA vs IND: அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகிய சஹார், ஷமி! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதை தொடர்ந்து கேஎல் ராகுல் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ரோஹித் சர்மா தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீப காலங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து வந்த அவர் தற்போது முழுமையாக குணமடைந்து இந்தியாவுக்காக விளையாட தயாராக உள்ளார்.

Trending


இருப்பினும் தம்முடைய தந்தையின் உடல்நிலை திடீரென்று மோசமாக மாறியதால் நடைபெற்ற முடிந்த டி20 தொடரில் அவர் பாதியிலேயே வெளியேறினார். இந்த சூழ்நிலையில் தம்முடைய தந்தையின் உடல் நிலையை பார்ப்பதற்காக அனுமதி கொடுக்க வேண்டும் என்று தீபக் சஹார் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது அதை ஏற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ அவருக்கு இந்த ஒருநாள் தொடரிலிருந்து விடுப்பு கொடுப்பதாக அறிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் ஆகாஷ் தீப் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதை விட அடுத்ததாக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா ஃ பைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். எனவே தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைப்பதற்கு அவரைப் போன்ற பவுலர் மிகவும் அவசியமாகும். இருப்பினும் உலகக் கோப்பையிலேயே லேசான காயத்துடன் விளையாடிய அவர் இன்னும் அதிலிருந்து குணமடையாததால் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆனால் அவருக்கான மாற்று வீரரை பிசிசிஐ அறிவிக்காத நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஷமியின் இடத்தை நிரப்புவதற்காக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய பின் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் இணைவார் என்பதால் 2, 3ஆவது ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement