ஐசிசி மாதாந்திர விருதுகள்: டிசம்பர் மாதத்தின் விருதை வென்ற பாட் கம்மின்ஸ், தீப்தி சர்மா!
டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸும், சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்க பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் என தேர்வு செய்யப்படுகின்றார். இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஆடவர் கிரிக்கெட்டில் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக அணியை வழிநடத்தி, கோப்பையை வெல்ல காரணமாக இருந்ததால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
Trending
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இடது கை பேட்டராகவும், வலது கை சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ள தீப்தி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடி அசத்தினார். அதன் அடிப்படையில் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now