Advertisement

Womens T20I Tri-Series: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 20, 2023 • 10:53 AM
Deepti Sharma, debutant Amanjot Kaur star in win over Proteas
Deepti Sharma, debutant Amanjot Kaur star in win over Proteas (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்கா, வெஸ் இண்டீஸ் மற்றும் இந்தியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. மூன்று அணிகள் பங்கு பெறும் இந்த முத்தரப்பு டி20 தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையில் நடக்கிறது. 

முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

Trending


அதன்படி முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை யாஸ்டிகா படியா 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தீப்தி சர்மா 33 ரன்களில் வெளியேறினார். அறிமுக வீராங்கனை அமன்ஜோத் கௌர் நிலைத்து நின்று  41 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் லாபா 2 விக்கெட்டும், அயபோங்கா காகா, காப் மற்றும் டக்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பறினர்.

இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் 6 ரன்களிலும், போஷ் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய மரிஸான் காப் 22, கேப்டன் சுனே லுஸ் 29, டிரைன் 26 என  ஓரளவு ரன் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன் மூலம் இந்திய மகளிர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பந்து வீச்சு தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், தேவிகா வைத்யா 2 விக்கெட்டையும்கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன்ஜொத் கௌர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கள் மோதும் 2 ஆவது போட்டி நாளை மாலை 6.30 மணிக்கு ஈஸ்ட் லண்டன் மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement