
ஐபிஎல் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற 38ஆவது போட்டியில் பஞ்சாப் மைதானத்தில் மோதிக்கொண்ட பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 257 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச மொத்த மொத்தத்தை பதிவு செய்தது. தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியால் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதை அடுத்து தனது ஐந்தாவது வெற்றியை 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியது.
ஆனால் இதற்கு முன்பு கடைசி ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மோதிய போட்டியில் 136 என்ற எளிமையான இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி வெற்றிக்கு மிக மிக அருகில் இருந்து கடைசியாக யாரும் எதிர்பாராத விதமாக 128 ரன் மட்டுமே எடுத்து ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி எந்த அணயாக இருந்தாலும் அதிகம் காயப்படுத்தி இருக்கும். ஏனென்றால் கேப்டன் கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து வெற்றி கையில் இருந்தது.