ஐபிஎல் 2021 முதல் தகுதிச்சுற்று: டெல்லி vs சென்னை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் மோதுகின்றன.
கரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
இதில் நாளைய நடைபெறும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் புள்ளிப்பட்டியலின் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
- இடம் - துபாய் சர்வதேச மைதானம்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலின் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், பிரித்வி ஷா ஆகியோர் அபாரமான ஃபார்மில் இருந்தாலும், மிடில் ஆர்டரில் அந்த அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. ஆனாலும் பந்துவீச்சில் நோர்ட்ஜே, ரபாடா, ஆவேஷ் கான் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதால் அணிக்கு பலமாக அமைந்துள்ளது.
மேலும் கடந்தாண்டும் இறுதிப்போட்டிவரை சென்ற டெல்லி அணி கோப்பையை நழுவவிட்டுள்ளதால், நிச்சயம் இந்தாண்டு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்தாண்டு ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு, மாஸான கம்பேக்கை கொடுத்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.
ஆனாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அடுத்து விளையாடிய மூன்று போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்திருப்பது அணிக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ், கெய்க்வாட், ராயூடு ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் திறனை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சில் ஷர்தூல் தாக்கூர், டுவைன் பிராவோ சிறப்பாக செயல்படுவதால் நிச்சயம் சென்னை அணி இந்தாண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 25
- டெல்லி வெற்றி - 10
- சென்னை வெற்றி - 15
உத்தேச அணி
டெல்லி கேப்பிட்டல்ஸ்- பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), ரிபால் படேல், ஷிம்ரான் ஹெட்மையர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நோர்ட்ஜே
சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், ஷிகர் தவான், பிரித்வி ஷா
- ஆல் -ரவுண்டர்கள் - டுவைன் பிராவோ, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா
- பந்துவீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், அன்ரிச் நோர்ட்ஜே, அவேஷ் கான்.
Win Big, Make Your Cricket Tales Now